1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 27 மே 2024 (10:46 IST)

"நாட்டாமை" திரைப்படத்தில் இடம் பெற்ற மிச்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது - இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்!

நாட்டாமை திரைப்படத்தில் இடம்பெற்ற மிக்சர் மாமாவை யாராலும் மறந்து இருக்க முடியாது.
 
சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த அந்த படத்தில் அவரோடு  கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி கேரக்டரில் நடித்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில்  கவுண்டமணிக்கு அப்பாவாக செந்தில் நடித்திருப்பார்.
 
அப்போது தன்னுடைய மகன் செந்திலுக்கு பொண்ணு பார்க்க போன இடத்தில் அந்தப் பெண்ணின் அம்மா செந்திலின் முன்னாள் காதலி என்பதும், கவுண்டமணி பொண்ணு பார்க்க போயிருந்த பொண்ணு செந்திலின் மகள் கவுண்டமணியின் தங்கை என்பதும் தெரியவரும்.
 
அப்போது அவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது அங்கு ஒரு நபர் மிச்சர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.
 
அப்போது கவுண்டமணி இவ்வளவு அமளிதுமளி நடக்கும் போதும் இவன் யாரு நடு வீட்டுல மிச்சர் சாப்பிட்டுட்டு இருக்கிறான் என்று அந்த நபரை குறித்து கேட்க,அதற்கு செந்திலின் முன்னாள் காதலி உங்க அப்பா என்ன விட்டுட்டு போன பிறகு என் பிள்ளைக்கு இன்சியல் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இந்த ஆளுக்கு 20 வருஷமா நான் தான் சோறு போட்டு பார்த்துட்டு இருக்கிறேன் என்று சொல்ல அதையும் கண்டு கொள்ளாமல் அவர் மிச்சர் சாப்பிட்டு கொண்டு இருப்பார்.
 
அது அந்த நேரத்தில் அதிகமாக கவரப்பட்டது. இப்ப வரைக்கும் பல மீம்ஸ்களில் அவருடைய புகைப்படம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் அந்த கேரக்டர் உருவான விதம் குறித்து பேசி இருந்தார். 
 
அதாவது அந்த கேரக்டரில் நடித்த நபர் எலக்ட்ரிசனாக வேலை பார்த்து இருக்கிறார்.லைட் முன்னாடி உட்கார்ந்து இருக்கும் அந்த நபர் கேஎஸ் ரவிக்குமார் ஐந்தாவது லைட் சுச்சி போடு என்றால் போடுவாராம் பிறகு ஏழாவது லைட்டை சுச்சி போடு என்றால் போடுவாராம்.
 
வேறு எங்கேயும் செல்லாமல்... எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் இவர் அமர்ந்திருப்பதால் கே.எஸ். ரவிக்குமார் அவரை பார்க்கும் போதெல்லாம் இப்படியே உட்கார்ந்து இருக்கிறியே கொஞ்சம் எழுந்து போய் அந்த லைட்டை மாத்தி வைக்கலாமே என்று கேட்க, அதெல்லாம் என்னுடைய வேலை கிடையாது சார். நான் எலக்ட்ரீசியன்... எலக்ட்ரீசியனுக்குள்ள வேலையை தான் செய்வேன் என்று சொல்லி விடுவாராம்.
 
இதை கே.எஸ். ரவிக்குமார் மனதிற்குள்ளேயே வைத்திருக்கிறார். பிறகு இந்த காட்சி படம் படமாக்கப்படும் போது மிச்சர் சாப்பிடும் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று கே எஸ் ரவிக்குமார் யோசித்தபோது இவருடைய முகம் ஞாபகம் வந்திருக்கிறது. உடனே அவரை கூப்பிட்டு உனக்கு ஒரு கேரக்டர் தருகிறேன். நீ டிரஸ் மாத்திட்டு வா என்று சொல்ல அவரும் வந்திருக்கிறார்.
 
பிறகு அவருக்கு பட்டையை போட்டு கையில் மிச்சர் தட்டையும் கொடுத்து நான் உனக்கு டேக் சொன்னதும் நல்லா வாயை அங்கேயும் இங்கேயும் அசைத்து மிச்சர் சாப்பிடு அது மட்டும் போதும் என்று சொன்னாராம். 
கே. எஸ். ரவிக்குமார் சொன்னது போலவே அவரும் செய்திருக்கிறார்.
 
பிறகு திரைப்படம் வெளியானதும் அவருக்கு கிடைத்த விளம்பரத்தை பார்த்து அவர் கையில் தாம்பூல தட்டோடு வந்து வீட்டில் பார்த்தார். இப்ப வரைக்கும் பல மீம்ஸ்களில் அவர் புகைப்படம் இருக்கிறதை பார்த்திருக்கிறேன் என்று கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார்.