1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (20:55 IST)

நடிகருக்கு சம்பள பாக்கி வைத்த இயக்குநர்..

இரண்டாவது முறையாக தளபதியை வைத்து இயக்கிவரும் இளம் இயக்குநர், நடிகர் ஒருவருக்கு சம்பள பாக்கி வைத்துள்ளாராம்.


 
 
மிக இளம் வயதிலேயே பெரிய புகழ்பெற்ற இயக்குநர் இவர். இரண்டாவது படமே தளபதியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னை நிரூபித்துக் காட்டியவருக்கு, அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் தளபதி அளித்துள்ளார்.
 
பெரிய நடிகர்களை இயக்கினால்தான் நிறைய சம்பளம் வாங்க முடியும் என்பது இவரது கணக்கு. ஆனால், இவருடைய தயாரிப்பில் வெளியான படத்தில் நடித்த ஹீரோவுக்கு, 50 லட்சம் மட்டுமே சம்பளமாகக் கொடுத்துள்ளாராம். மீதி பணத்தைக் கேட்டால், ‘படம் நஷ்டம்’ என்று கண்ணீர் வடிக்கிறாராம். இதெல்லாம் நியாயமா இயக்குநரே..?