திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (13:49 IST)

கோடிகளில் சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர்

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் வெகு குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். சினிமா பிரபலங்கள்  பலரும் கூட அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஒரு வருடத்தில் 6 படமாவது நடிப்பதோடு, அவை வெற்றிப் படமாகவும்  உள்ளது.
 
 
சமீபத்தில் வெளியான புரியாத புதிர் நீண்ட நாள், விக்ரம் வேதா போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்தது. இனி  இம்மாதம் 29 ஆம் தேதி இவர் நடித்துள்ள கருப்பன் படமும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் அவரது வளர்ச்சி வெகு விரைவாக இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. தற்போது படங்களில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கிவந்த இவர் தொடர் வெற்றியின் காரணமாக தன் சம்பளத்தை 9 கோடிக்கு உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைப்பதே அரிதாக உள்ளதாம். இதனால் 10 கோடி கொடுப்பதற்கும் சில தயாரிப்பாளர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.