புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (10:38 IST)

பாராட்டிய சூப்பர் ஸ்டார்.. புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ந்த ‘டான்’ இயக்குனர்!

டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டான். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மேலும் இதன் க்ளைமேக்ஸை கண்டு தான் கண்ணீர் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சிவகார்த்திகேயன் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “இந்திய சினிமாவின் ‘டான்’ உடன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை சந்தித்து அவரின் ஆசியைப் பெற்றேன். அந்த 60 நிமிடமும் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும். நன்றி தலைவா. உங்களின் அருமையான நேரத்துக்கும் பாராட்டுகளுக்கும். #DON” என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதைப் போலவே இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அவருடன்ம் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர் “ ஒரு மகத்தான நாள். அவருடனான 60 நிமிட சந்திப்பு ஆசிர்வதிக்கப்பட்ட நேரம்.  ‘என்ன ஒரு படம்… என்ன ஒரு எமோஷன்’ என அவர் பாராட்டிய போது நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். ‘என்ன ஒரு மனிதர்’.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.