செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:00 IST)

லாஸ்லியா நடிக்கும் மூன்றாவது படம் இதுதான்: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற லாஸ்லியா ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. முதல் படமான ‘பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்பதும், டைட்டில் வைக்கப்படாத இன்னொரு படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும்
 
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாகவும் பூரனேஷ் என்பவர் நாயகனாகவும் நடிக்க உள்ளார்கள். இந்த படம் ஒரு அதிரடி திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் டெல்லி பாபு என்பவர் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல நடிகை ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது