அரசியல் படம் எடுக்கும் இயக்குனர் பாலா ? – ராமநாதபுரம் வருகை !

Last Modified செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (11:47 IST)
இயக்குனர் பாலா நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்று பணிகள் நடைபெறும் விதங்களைப் பார்வையிட்டார்.

இயக்குனர் பாலா சமீபத்தில் இயக்கிய வர்மா படம் தயாரிப்பாளருக்குப் பிடிக்காதக் காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து பாலா தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து இயக்குனர் பாலா இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, பணிகள் நடைபெறும் விதத்தை மேற்பார்வையிட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா ‘ நான் இயக்கும் புதுப்படத்தில் இது போன்றக் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதனால் இந்தக் கூட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இங்கு வந்தேன் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அடுத்து இயக்கப்போகும் திரைப்படம் தென் தமிழகத்தை சேர்ந்த அரசியல் படமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :