மமிதா பைஜுவை நான் அடித்தேனா?... குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் பாலா!
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொள்ள பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே வணங்கான் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷனுக்காக நேர்காணல்கள் அளித்து வருகிறார் பாலா. அதில் வணங்கான் படத்தில் முன்பு மமிதா நடித்தபோது அவரை பாலா அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
அதில் “நான் எப்படி ஒரு பெண் பிள்ளையை அடிப்பேன். அது என் குழந்தை போல அல்லவா? பாம்பேல இருந்து வந்த ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அவருக்கு மேக்கப் போட்டுவிட்டார். எனக்கு மேக்கப் போட்டால் பிடிக்காது. நான் வந்து பார்க்கும் போது அவர் மேக்கப்போடு இருந்ததால் என்ன மேக்கப் போட்டிருக்க? என அடிப்பது போல கையை ஓங்கினேன். அது நான் அவரை அடித்துவிட்டதாக தவறாகப் பரவிவிட்டது” எனக் கூறியுள்ளார்.