வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (15:56 IST)

20 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கதை…. NTR 31 பற்றி மனம்திறந்த கேஜிஎஃப் இயக்குனர்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து ஜூனியர் என் டி ஆர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மார்ச் 25 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படம் திரையரங்குகளின் மூலம் வசூலாக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் NTR-ன் அடுத்த படத்தை கொரட்டாலா சிவா இயக்க அனிருத் இசையமைக்கிறார். “FURY” என்ற தலைப்போடு நேற்று இந்த படத்தின்  மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இன்று NTR ன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் NTR 31 படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.

மேலும் படத்தைப் பற்றி பேசியுள்ள பிரசாந்த் “ இந்த கதை என் மனதில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஆனால் அப்போது அதன் பிரம்மாண்டத்தை எண்ணி பயந்தேன். ஆனால் இப்போது என்னுடைய கனவு படைப்பை கனவு நாயகனோடு உருவாக்குவதற்கான காலம் அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.