திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (17:04 IST)

நிர்வாண உடலை மறைக்க அமலா பால் பட்ட பாடு இருக்கே...! ஐய்யோ பாவம் - இயக்குனரின் நெருடலான பதில்!

ஆடை படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடித்த அமலா பால் பற்றி மனம் குறுகி பேட்டியளித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். 


 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 
 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும்  "ஆடை"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
 
இப்படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்த டீசர் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர்ந்த கட்டடம் ஒன்றில் அமலா பால் நிர்வாணமாக அமர்ந்திருப்பது போன்றும், பலர் மேலே பார்ப்பது போன்றும் அமைக்கப்பட்டிருந்த இந்த காட்சிகள்  20 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும், நிர்வாணமாக நடித்த அமலாபாலை சுற்றி 15 பேர் இருந்ததாகவும்  ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 


 
இந்நிலையில் அமலா பாலின் நிர்வாணக் காட்சி குறித்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் ரத்னகுமார், இந்த காட்சியில் அமலா பால் ஆடையில்லாமல் டிஷு பேப்பர்களை உடலில் சுற்றிக்கொண்டு நடிக்கவேண்டும் என கூறினேன். அவர் சென்று உடல் முழுவது கேப் இல்லாமல் அட்டை பாக்ஸ் போன்று சுற்றிக்கொண்டு வந்தார். 
 
பின்னர் நான் அழைத்து அந்த கதாபாத்திரத்திற்கு  டிஷு பேப்பர்ஸ் கிடைக்காமல் கையில் கிடைத்ததை எடுத்து 30 நிமிடத்தில் உடலில் சுற்றி நிர்வாண உடலை பதற்றத்தோடு  மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும். என தெளிவாக கூறினேன். பின்னர் நாங்கள் வெளியில் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்.  அப்போது அமலா பால் கூனி குறுகி ஒரு விதமான பயத்துடன் வந்ததை பார்த்து எனக்கு ரொம்ப பாவமா ஆகிடுச்சு. அவர் பார்ப்பதற்கு  பரிதாபமாக இருந்தார்.  அமலாபாலின்  அந்த பயம் தான் எங்களுக்கும் பீல் ஆகியது என்று மிகவும் நெருடலாக  அமலா பாலின் நடிப்பு குறித்து கூறினார் ரத்னகுமார்.