திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (16:47 IST)

சிறையில் இருந்தாலும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன சசிகலா !!

கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பலரும் கேள்விகள் எழுபிய நிலையில், உயர் நீதிமன்றம் நீதிமன்றம் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, சசிகலாவை சின்னம்மா என்று அதிமுகவின் அழைத்து, ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை பொறுத்திப் பார்த்தனர்.

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும், இளவரசிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பின், அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அஹ்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் இறப்புக்கு பரோலில் வெளியே வந்த அவர் பின்னர் மீண்டும் சிறைக்குச் சென்றார்.

இதற்கிடையில், அவர் சிறையில் சகல சவுகரியங்களுடன் வாழ்வதாகவு, அவர் ஷாப்பிங் செல்வதாகவும்  புகார்கள் வெளியானது.

இந்நிலையில், சசிகலா சிறைக்குச் சென்று இரண்டு வருடங்கள் ஆனாலும் கூட அவரது பெயர் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக அவருக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதுமொரு காரணம்.

இன்று, டுவிட்டரில் இந்திய அளவில் சசிகலாவின் பெயரை டுவிட்டர் வாசிகள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

குறிப்பாக இன்று அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவிலோம் ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்றும் ஏற்கனவே அதிமுகவில் எடுத்த முடிவுதான் நாளையும் தொடரும் என தெரிவித்து, அடுத்து சசிகலாதான் அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.