வெளியானதா வர்மா போஸ்டர்?

Last Modified சனி, 22 செப்டம்பர் 2018 (18:41 IST)
பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் வர்மா படத்தின் போஸ்டர் வெளியானது.
 
கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் அர்ஜுன் ரெட்டியும் ஒன்று. தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இப்படம் அப்படத்தின் நாயகன் விஜய் தேவாரகொண்டாவுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்று தந்தது.
 
இதைத் தொடர்ந்து இப்படத்தினை தமிழில் மறு ஆக்கம் செய்ய முடிவு செய்து அதில் விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக்க தயாரிப்பாளர்கள் விக்ரமை அனுகினர். அதற்கு ஒப்புக்கொண்ட விக்ரம் தனது வெகுநாள் நண்பரான இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இப்படத்தை இயக்கித்தர பாலாவை அனுகினார். விக்ரமின் வேண்டுகோளை ஏற்ற பாலா இப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டார். பாலா இயக்கும் முதல் ரீமேக் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு நாளை துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
சேலத்தில் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :