என் கண்ணத்தை கிள்ளிவிட்டு போன திரிஷா: வாரிசு ஹிரோவின் மெமரீஸ்!

Last Updated: வியாழன், 3 ஜனவரி 2019 (21:18 IST)
தெலுங்கில் வெளியாக பல தரப்பு மக்களை கவர்ந்த ஆர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். 
 
இவர் நடிக்கும் படத்திற்கு வர்மா என பெயரிடப்பட்டுள்ளது. பாலா இயக்கும் படத்தை அவரின் பி ஸ்டுடியோஸ் வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மேகா என்ற மாடல் நாயகியாக நடித்துள்ளார். படம் பிப்ரவரியில் ரிலீஸாகும் என தெரிகிறது. 
 
இந்நிலையில் துருவ் விக்ரம் தனக்கு பிடித்த நடிகையை பற்றி தெரிவித்திருந்தார். அவர் கூறியது பின்வருமாறு, சிறுவயதில் இருந்தே எனக்கு திரிஷாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இதுவரை அவரை சந்தித்தது கூட இல்லை.
 
ஒருமுறை ப்ரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றுவிட்டார் என தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.


இதில் மேலும் படிக்கவும் :