சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (12:55 IST)

இதுக்கு மேலையும் தோத்தா அப்பாவுக்கு அசிங்கம் - துருவ் விக்ரம் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகரான விக்ரம் சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு சாமி , பிதாமகன் , ஐ , தாண்டவம், தூள், அந்நியன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். 
 
இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் ஹிட் அடிக்க அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பின்னர் அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
 
அது பெரிதாக பேசப்படாததால் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தில் நடித்து வருகிறார். இதுக்கு மேலயும் தோற்றால் அப்பாவுக்கு தான் அசிங்கம் என்பதால் வெறித்தனமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.