தனுஷை அசத்திய மாரி செல்வராஜ்: மீண்டும் கிடைத்த வாய்ப்பு!

dhanush mariselvaraj
தனுஷை அசத்திய மாரி செல்வராஜ்
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (22:36 IST)
தனுஷ் நடிப்பில் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கிவரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நெல்லை பகுதியில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது மாரி செல்வராஜின் பணியை கவனித்த தனுசுக்கு அவரது பாணி மிகவும் பிடித்துவிட்டதாம். எடுக்க வேண்டிய காட்சிகளை மட்டும் கச்சிதமாக எடுப்பதாகவும் ஒரு காட்சியை கூட தேவையில்லாமல் எடுக்காமல் சிக்கனமாக இருப்பதை கண்டு உண்மையிலேயே அதிசயித்துப் போனதாக தெரிகிறது.
அனுபவமுள்ள இயக்குனர்கள் கூட பல காட்சிகளை படமாக்கி விட்டு அதை பின்னர் எடிட்டிங்கில் வெட்டி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் கச்சிதமாக தேவையான காட்சியை மட்டும் எடுப்பது தயாரிப்பு தரப்புக்கு செலவு மிச்சம் மட்டுமன்றி நடிகர்களுக்கு வேலையும் மிச்சம் ஆகிறது

இதனை பார்த்த தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :