1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (11:37 IST)

பார்ட் 2 எடுங்க நானே நடிக்கிறேன்… இயக்குனருக்கு நம்பிக்கைக் கொடுத்த தனுஷ்!

நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம் படத்தின் பார்ட் 2 வில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஓராண்டு தாமதத்துக்கு பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க சொல்லி தனுஷ் கார்த்திக் சுப்பராஜிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.