செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (18:54 IST)

8 நாளில் வாத்தி பட வசூல் இவ்வளவா? மேடையில் வெளியிட்ட இயக்குனர்!

தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள படம் ‘வாத்தி’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆன திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை செய்யவில்லை என்றாலும், தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம். தெலுங்கில் மட்டும் தயாரிப்பாளருக்கு வருவாயாக 20 கோடி ரூபாய் அளவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

 இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெங்கட் அட்லூரி 8 நாட்களில் வாத்தி திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவித்தார். மேலும் வசூல் பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதால்தான் தயாரிப்பாளர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வில்லை என்றும் கூறி நகைச்சுவையாக பேசியுள்ளார்.