1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (21:22 IST)

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்… ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்!

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே இந்த படத்தையும் வெளியிடும் என சொல்லப்படுகிறது.