பிரபுதேவாவுக்காக குரல் கொடுத்த தனுஷ்…. வெளியான சூப்பர் தகவல்!
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் தனுஷ்.
தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்களுக்கு எப்போதும் பாடல்கள் பயங்கரமாக ஹிட்டாகிவிடும். எம் ஜி ஆர், ரஜினி, கமல், விஜய், தனுஷ் என்று அந்த வரிசை நீளும். அப்படி சமீபத்தில் தனுஷின் ரௌடி பேபி பாடல் உலகம் முழுவதும் பேய்ஹிட் ஆனது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.
இதையடுத்து இந்த வெற்றிக்கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. பிரபுதேவா இப்போது ஜல்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் துள்ளலிசை பாடல் ஒன்றை தனுஷ் பாடியுள்ளாராம். இந்த பாடல் படத்தின் ப்ளஸ் பாய்ண்ட்களில் ஒன்றாக அமையும் என சொல்லப்படுகிறது.