1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (10:49 IST)

தொடங்கியது தனுஷின் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டம் நடந்து முடிந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று முதல் புதுக்கோட்டையில்  சில நாட்களுக்கு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.