தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எங்கே? எப்போது?
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.
இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அடங்காத அசுரன்தான் என்ற பாடல் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. இரண்டாவது சிங்கிளும் இந்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் ஜூன் 1 ஆம் தேதி நடக்கும் என சொல்லப்படுகிறது.