செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:48 IST)

10 வருடத்துக்குப் பிறகு ரி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற தனுஷ் படம்… எங்கு தெரியுமா?

தனுஷின் 3 திரைப்படம் தெலுங்கில் ரி ரிலீஸ்  ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அடுத்து அவர் நடிப்பில் நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இப்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயமாக ஒரிஜினல் ரிலீஸின் போது அட்டர் ப்ளாப் ஆன அந்த படம் இப்போது தெலுங்கில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறதாம்.