1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (16:48 IST)

அண்ணன தாலாட்டும் தங்கை… எமோஷனல் பாடலை வெளியிட்ட மாறன் படக்குழு!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான பொல்லாத உலகம் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இன்று அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் அண்ணன தாலாட்டும் என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.