திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (08:42 IST)

கர்ணன் படத்தை வாங்கக் கூடாது… திரையரங்குகளுக்கு மிரட்டல் விடும் நபர்கள்!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என சமூகவலைதளங்களில் மிரட்டல் விடுகின்றனர்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘திரெளபதியின் முத்தம்’ என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இந்த பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குல கடவுளான திரௌபதியை இழிவுப்படுத்துவதாக எண்ணி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் இந்த பாடலோடு திரையரங்கில் கர்ணன் படம் ரிலீஸாகக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் விதமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.