1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (17:48 IST)

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு!

sathyajothi
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு!
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே தனுஷ் நடித்த மாறன் என்ற திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்தது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாக இருப்பதாகவும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது
 
இந்த படத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.