செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (18:39 IST)

’இரவின் நிழல்’ ரிலீஸ் தேதி இதுதான்: தனுஷ் அறிவிப்பு

Iravin Nizhal
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாலை 6 மணிக்கு அறிவிக்க இருக்கிறார் என பார்த்திபன் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபனின் ’இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதையடுத்து ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் உலகின் முதல் முதலாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் விருதுகளையும் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது