'இரவின் நிழல்’ ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிப்பு!
பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல் திரைப்படம் ஜூலையில் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கான புதிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பார்த்திபன் வரலட்சுமி சரத்குமார் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பல்வேறு விருதுகளுக்கு சென்று உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது