செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 6 பிப்ரவரி 2020 (15:21 IST)

Dhanush 44 அசத்தல் அப்டேட்: விஜய் பட ஹீரோயின் தனுஷுக்கு ஜோடி!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுர வெற்றிகொடுத்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. கடைசியாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படமும் டீசண்டாக கலெக்ஷனை பெற்று கல்லா கட்டியது. 
 
தற்போது அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்தியில் ரீமேக் செய்யவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து  ‘Atrangi Re’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனுஷ் 44 படத்தின் அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அவரும் ஏறக்குறைய படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.