திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (19:24 IST)

தனுஷின் ‘மாறன்’ படத்தின் வீடியோ பாடல் வெளியீடு!

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் அடுத்த மாதம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
 
தனுஷ் செம ஆட்டம் போட்டுள்ள இந்த பாடல் தனுஷின் அறிமுக பாடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பொல்லாத உலகம் என்று தொடங்கும் இந்த பாடலை தனுஷ் மற்றும் தெருகுரல் அறிவு பாடி உள்ளனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்து உள்ளார் என்பது தெரிந்ததே