1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:29 IST)

ஆபாச வீடியோக்களை படம்பிடித்த நடிகை கைது !

ஆபாஷ வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்ட இளம் நடிகை போலீஸார் கைது செய்துள்ளனர் வந்தனர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வருபவர் நடிகை கெஹானா வசிஸ்த். இவருக்கு வயது 32 ஆகும்.

இவர் ஆசிய அழகுப் போட்டியில் பங்கு பெற்று மிஸ் ஆசியா பிகினி பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் ஏற்கனவே 80க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், பிலிம் டூனியா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில். கெஹானா வசிஸ்த் சுமார் 87 ஆபாச வீடியோக்களைப் ஷீட்டிங் செய்து அதை எடிட் செய்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். கெஹானா வசிஸ்த் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்ததற்கான ஆதாரத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர். எனவே நடிகை இன்று நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர் 3 பெண்களைக் கட்டாயப்படுத்தி இந்த வீடியோக்களை எடுத்ததாகவும் கெஹானா வசிஸ்த் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கெஹானா வசிஸ்த். உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.