திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (17:32 IST)

நித்யா மேனனுக்கு தனுஷ் வாழ்த்து.! 'இது ஒரு சிறந்த நாள்' என ட்விட்டரில் பதிவு..!!

Dhanush
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட நித்யா மேனனுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.  அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
 
சிறந்த நடனத்திற்கான விருது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு கிடைத்துள்ளது. இப்பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், “திருச்சிற்றம்பலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஷோபனாவாக நித்யா மேனன் தேசிய விருதை வென்றது எனக்கு தனிப்பட்ட வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜானி மாஸ்டருக்கும், சதீஷ் மாஸ்டருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இது ஒரு சிறந்த நாள்” என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.