1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (09:46 IST)

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘கேப்டன் மில்லர்’ அப்டேட்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள திரைப்படத்துக்கு கேப்டன் மில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையடுத்து நேற்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ’ போர் வரும் நாள் எண்ணி கூர்கொண்ட ஆயுதமாய் களம் காண காத்திருக்கும் எங்கள் #கேப்டன்மில்லர் @dhanushkraja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !” என வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.