செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:43 IST)

நானே வருவேன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இது சம்மந்தமான போஸ்டரில் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அனேகமாக செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து டிரைலர் இன்று வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்று டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை. விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.