வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:02 IST)

திருவிளையாடல் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த சிறுவனா இது?... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தனுஷ் ஸ்ரேயா, பிரகாஷ் ராஜ், கருணாஸ், மௌலி மற்றும் சரண்யா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திருவிளையாடல் ஆரம்பம்’. இந்த படத்தில் தனுஷ் தன் காதலை விற்கும் இளைஞராக நடித்திருப்பார். நகைச்சுவை மற்றும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தில் தனுஷின் தம்பி சாமிநாதன் எனும்  கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவனின் வேடம், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் இப்போது அந்த சிறுவன் வளர்ந்து இளைஞனாகி விட்ட நிலையில் அவரின் சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.