1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2017 (23:12 IST)

தனுஷை டென்ஷனாக்கிய தெலுங்கு சேனல்: பாதியில் வெளியேறிய தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. செய்தியாளர் சந்திப்பு, சேனல்கள் பேட்டி என்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் புரமோஷனுக்காக தெலுங்கு மீடியா ஒன்றின் பேட்டியில் தனுஷ் கலந்து கொண்டார்.



 
 
இந்த பேட்டியின்போது பேட்டி எடுக்கும் பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக இருந்த சுசிலீக்ஸ் குறித்த கேள்விகளை கேட்டதால் தனுஷ் டென்ஷன் ஆனார். உடனே மைக்கை கழட்டி எறிந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
 
பின்னர் சேனல் நிர்வாகிகள் தனுஷை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தனர். அதன் பின்னர் பேட்டி எடுத்த பெண், தனுஷை டென்ஷனாக்காமல் கூல் செய்து பேட்டியை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.