ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:22 IST)

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை… செல்வராகவனை இயக்கியது குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் நடித்துள்ளார்.

அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் இன்று வெளியானது. அதில் தனுஷ் “ஒரு இயக்குனராக உங்களை நடிக்க வைத்து இயக்குவேன் என நான் கனவிலும் நினைத்ததில்லை. மிகவும் நன்றி” எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த செல்வராகவன் “நன்றி இயக்குனர் சார். கண்டிப்பாக ராயன் ஒரு காவியமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.