வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (07:57 IST)

அஜித்திற்காக செல்வராகவன் எழுதிய காசிமேடு கதைதான் இப்போது ராயன் –ஆ வருகிறதா?

தனுஷ் தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் படத்தின் தலைப்பு ‘ராயன்’ என் அவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் லுக் போஸ்டரில் பாஸ்ட் புட் கடை பின்னணியில் தனுஷ், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் ரத்தம் வழிய நின்றிருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த படம் 2006 ஆம் ஆண்டு அஜித், தனுஷ், பரத் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்க இருந்த ‘காசிமேடு’ கதையைதான் தற்போதைய காலத்துக்கு ஏற்றபடி மாற்றி ’ராயன்’ ஆக தனுஷ் இயக்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.