ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (16:07 IST)

மனைவி ஐஸ்வர்யாவுடன் தனுஷ் மீண்டும் இணையும் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் '3'. தனுஷ் , ஸ்ருதிஹாசன் நடித்த இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது அதேபோல் ஐஸ்வர்யா இயக்கிய 'வை ராஜா வை' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது. இதனையடுத்து ஐஸ்வர்யா இயக்கிய ஸ்டண்ட் கலைஞர்களுக்கான குறும்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் ஐஸ்வர்யா மூன்றாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்த படம் விண்வெளி சம்பந்தப்பட்ட த்ரில் படம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி காதல், சோகம், செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு ஸ்டிரைக் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது

இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் காலா, வடசென்னை, மாரி 2, உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.