திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2024 (08:00 IST)

புஷ்பா 2 தயாரிப்பாளர்களை குற்றம் சாட்டிய தேவி ஸ்ரீ பிரசாத்… புஷ்பா 2 மேடையில் நடந்த சர்ச்சை!

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இதையடுத்து சென்னையில் படத்தின் மற்றொரு பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் “ ரவி சார் (தயாரிப்பாளர்) நீங்கள் நான் பாடல்களை குறிப்பிட்ட நேரத்தில் தரவில்லை… பின்னணி இசையை சரியான நேரத்தில் தரவில்லை என குறை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். இப்போது கூட நான் தாமதமாக வந்ததாக சொல்வீர்கள். நான் அரைமணி நேரம் முன்பே வந்துவிட்டேன். ஆனால் கேமரா எண்ட்ரி வழியாகதான் செல்லவேண்டும் எனக் காக்க வைத்தார்கள்.  எனக்குத் தெரியும் உங்களுக்கு என் மேல் அன்பு உண்டு என. ஆனால் அன்பு இருக்கும்போது குறைகளும் வந்துவிடுகிறது.

இது மாதிரியான விஷயங்கள் மேடைக்குப் பின்னால் பேசப்படக் கூடாது. எனக்குத் தெரியும் நான் சில விஷயங்களைப் பேசும்போது, அது எனக்கும் சில பிரச்சனைகளைக் கொடுக்கும் என்று. ஆனால் நான் திறந்த மனதுடன் பேச விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். புஷ்பா 2 படத்தின் பின்னணி இசைப் பணிகளில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.