திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (20:47 IST)

சன் நெட்வொர்க்கில் இருந்து விலகிய பிரபலம்: காரணம் என்ன?

சீரியல் மற்றும் சினிமாவில் பிரபலாமான ஒருவர் தேவதர்ஷினி. இவர் சன் டிவியில் ஞாயிற்றுகிழமைகளில் வரும் சண்டே கலாட்டா நிகழ்ச்சியில் கலக்கி வந்தார். 
 
இந்த நிகழ்ச்சி தற்போது 300 எபிசோட் தாண்டி சென்றுள்ளது. ஆனால், தேவதர்ஷினி அந்த நிகழ்ச்சியில் திடீரென் இருந்து வெளியேறினார். இதனால் நிறுவனத்தோடு ஏதேனும் பிரச்சனையா என சர்ச்சைகள் எழுந்தது. 
 
இதற்கு தேவதர்ஷினி பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இது ஒரு மாற்றத்திற்காகதான், சின்ன ப்ரேக் தேவைப்பட்டது, அதுமட்டுமில்லாமல் அது என் குடும்ப சேனல்தான், எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். 
 
தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் இவர் நடித்து வருவதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.