1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:36 IST)

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் நிச்சயதார்த்தம் இன்றா?

தீபிகா படுகோனேவுக்கும், ரன்வீர் சிங்குக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தமிழில் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்துள்ள தீபிகா, ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருகின்றனர்.
 
தீபிகா படுகோனேவுக்கு இன்று பிறந்த நாள். 31வது வயதான தீபிகாவுக்கும், ரன்வீர் சிங்குக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது என தகவல் பரவியது. இருவருடைய குடும்பத்தாரும் நிச்சயதார்த்த விழாவுக்காக இலங்கை சென்றுள்ளனர் என்றும்  கூறப்பட்டது. ஆனால், இது பொய்யான தகவல் என்று தெரியவந்துள்ளது.
 
‘பத்மாவதி’ படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்ததற்காக தீபிகாவின் தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம்  செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.