1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (16:21 IST)

படம் வெளியாகும்வரை வாயை திறக்காதே; ஹீரோவை திட்டிய பிரமாண்ட இயக்குநர்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு  எழுந்துள்ள நிலையில் பத்மாவதி படம் ரிலீஸாகும் வரை வாயை திறக்கக் கூடாது என்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பத்மாவதி படத்தில் மன்னர் அலாவுத்தீன் கில்ஜியாக நடித்துள்ளார் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே பத்மாவதியாக நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாக கூறி  சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் கண்ணை பறிக்கும் கலர்களில்  உடை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வாய் வலிக்க பேசுவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் பன்சாலியை ரன்வீர் சிங்கை அழைத்து ஏற்கனவே பத்மாவதி படத்திற்கு பிரச்சனையாக உள்ளது. படம் ரிலீஸாகும் வரை வாயை திறக்க கூடாது  என்று திட்டியுள்ளார்.
 
கடந்த வாரம்தான் தனது காதலி தீபிகாவுடன் ஜோடி போட்டுக் கொண்டு பார்ட்டி ஒன்றுக்கு சென்றார் ரன்வீர் சிங். இந்நிலையில்  பன்சாலி ரன்வீரை அழைத்து அட்வைஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.