பிரபல பாடகரின் மகன் மரணம்....ரசிகர்கள் அதிர்ச்சி

brown
Sinoj| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:49 IST)

பிரபல ஹாலிவுட் பாப் பாடகரின் மகன் பிரவுன் ஜூனியர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலப் பாப் பாடகர் பாபி பிரவுன். இவர் கடந்த 1980 களிலிருந்து ரேப் பாடல்களைப் பாடி மக்களிடம் பிரபலமான உள்ளார்.

இந்நிலையில், இவரது மகன் பாபி பிரவுன் ஜூனியர் கடந்த
நவம்பர் 18 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவருக்கு வயது 28 ஆகும்.

இந்நிலையில் நேற்று அவரது வீட்டிலிருந்து மருத்துவருக்கு அவசர
அழைப்பு வரவே
போலீஸார் அங்கு சென்றனர். ஆனால் பாபி பிரவுன் உயிரிழந்த நிலையில் சடலமான மீட்கப்பட்டார்.

இளம் பாப் பாடகரின் மரணம் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஹாலிவிட் துறையினருக்கும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேதபரிசோதனை நடத்திய பின் தான் பாபி பிரவுனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :