ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (22:18 IST)

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடக நடிகையின் வீட்டில் நிகழ்ந்த மரணம் !

சின்னத்திரை நாடக நடிகையாக தமிழக மக்களுக்கு அதிகப் பரீட்சயமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, மெட்டி ஒலி, போன்ற நாடகங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஏற்பட்ட  மாரடைப்பு காரணமாக காலமானார்.

எனவே அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இளம்வயதிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை நடிகர், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ்க்கு ஆறிதல் கூறி வருகின்றனர்.