அம்மாவின் உருவத்தோடு திருமணப் புகைப்படம்… டி இமான் நெகிழ்ச்சி!
இசையமைப்பாளர் டி இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது .
அதையடுத்து அமலி என்ற பெண்ணை டி இமான் மறுமணம் செய்துகொண்டார். அமலி, திரையுலகில் கலை இயக்குனராக இருந்த உபால்டு என்பவரின் மகள் எமிலி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் நேற்று இந்த திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாக சமூகவலைதளத்தில் மறுமணம் பற்றிய பதிவை பகிர்ந்துள்ளார் இமான். அதில் தனது தந்தை மற்றும் குடும்பம் மற்றும் மணப்பெண் அம்லியின் குடும்பம் ஆகியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவோடு அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் மறைந்த அவரின் அம்மாவின் உருவத்தையும், அமலியின் மறைந்த தந்தை உருவத்தையும் கட் அவுட்டாக செய்து எடுத்த குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.