திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (08:22 IST)

கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமான்: திருமூர்த்திக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த பாடலை சமீபத்தில் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பவர் மிக அழகாக பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 
 
அஜித் ரசிகர் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோ விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் வரை சென்றது. திருமூர்த்தி பாடிய பாடலின் வீடியோவை பார்த்து அசந்துபோன டி இமான், திருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு விரைவில் அவருக்கு தனது படத்தில் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் தான் கொடுத்த வாக்கை தற்போது டி.இமான் காப்பாற்றியுள்ளார். டி.இமான் தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ஜீவா நடித்து வரும் ’சிறு’ என்ற படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாட திருமூர்த்தி அவர்களுக்கு டி.இமான் வாய்ப்பு கொடுத்துள்ளார். ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இடம்பெறும் இந்த பாடலை பார்வதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது