1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:49 IST)

வெற்றிமாறனால் தாமதமாகும் மிஷ்கின் & விஜய் சேதுபதி படம்!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கி நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார்.

இப்போது விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கை திட்டமிட்டது போல நடத்தாமல் வெற்றிமாறன் தாமதமாக்கிக் கொண்டே வருகிறாராம். அதனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இப்போது நடித்துவரும் விஜய் சேதுபதி மிஷ்கின் படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இழுத்தடிது வருகிறாராம்.