ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 15 நவம்பர் 2020 (12:55 IST)

சிவி குமாரின் அடுத்த பட டைட்டில்; ‘டாவின்ஸி கோட்’ டைப் படமா?

சிவி குமாரின் அடுத்த பட டைட்டில்; ‘டாவின்ஸி கோட்’ டைப் படமா?
சமீபத்தில் சிவி குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான டாவின்சி கோட் டைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இயேசுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட டாவின்சி கோட் படம் போல் தமிழகத்தின் வரலாற்றினை அடிப்படையில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவர் கூறியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் சிவி குமார் தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படத்தின் டைட்டில் ’கொற்றவை’ என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழக வரலாற்றின் ஊடாக ஒரு சாகசப் பயணம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளது இந்த படம் டாவின்ஸி கோட் படத்தின் டைப்பில் இருக்கும் என்பதை கிட்டத்தட்ட உறுதியாக்கி உள்ளது 
 
மேலும் ‘கொற்றவை’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிவி குமார், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது