ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (18:41 IST)

ஹீரோ ஆகிறார் முனிஷ்காந்த்: டைட்டில் அறிவிப்பு!

ஹீரோ ஆகிறார் முனிஷ்காந்த்: டைட்டில் அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முனிஷ்காந்த் என்பது தெரிந்ததே. இவர் விஷ்ணுவிஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது முனிஷ்காந்த் ஹீரோவாக உருவாக்கியுள்ளார். இவர் முதல் முதலாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வெற்றிப்படங்களைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிடில் கிளாஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது 
 
சந்தோஷ் தயாநிதி இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ஆனந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெற்றி பெற்றால் முனிஷ்காந்த் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்