1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By ஜெ.துரை
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (11:53 IST)

படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும், - நடிகர் சந்தானம் பேட்டி!

கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர் கல்லூரியில் பொதுமக்கள் பயனடையும் விதமாக உணவு அரங்குகள் துவங்கப்பட்டுள்ளது.


உணவருந்திகொண்டே இங்கு பயிலும் மாணவர்கள் சினிமா சம்மந்தமான தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான ஏற்பாடுகளை கல்லூரி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நடிகர் சந்தானம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சந்தானம்: கிளஸ்டர் கல்லூரியில் சினிமா மீடியா சம்பந்தப்பட்ட படிப்புகளை நடத்தி வருகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கு தினந்தோறும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இங்கு உணவு அருந்த வரும்போது பொழுதுபோக்கு அம்சமாக ஏற்படுத்தி உள்ளனர். நான் படிக்கும்போது ஒரு கேண்டின் தான் இருக்கும் அந்த கேண்னில்  அழுக்கு உடையுடன் போட்டுக்கொண்டு ஒருவர் இருப்பார்.

அவர்தான் சமைப்பார், அவர்தான் ஓனர்,அவர்தான் சப்ளையர், காலேஜில் அவர் போடுவது தான் சாப்பாடு, நாம் எதுவும் கேட்க முடியாது அந்த மாதிரியான காலகட்டத்தை இங்கு மாற்றியுள்ளனர்.

இதை கோயம்புத்தூரில் செய்துள்ளார்கள், இங்கு வரக்கூடிய மக்கள் நல்ல உணவை அருந்துவார்கள், இப்போது உள்ள காலகட்டத்தில் குக் பண்ணி சாப்பிடுவதை விட புக் பண்ணி சாப்பிடுவது தான் அதிகமாக உள்ளது.

கோவை மக்கள் ரொம்ப அன்பானவர்கள், குசும்பானவர்கள், நான் காமெடி பண்ணுவதால் அவர்களுடன் ஒரு தொடர்பு இருக்கிறது. தனக்கு பிடித்தமான உணவு சாம்பார்,உருளைக்கிழங்கு பிரை அதுதான் பிடிக்கும்.

முக்கியமாக முந்தைய காலத்தில் கல்லூரி கேண்டினில் எதிர்த்து எதுவுமே கேட்க முடியாது, அப்போ ரஜினி,ஜெயிலர், மாதிரி பேசுவார்கள், நான் வைக்கிறதுதான் சாம்பார் சாதம், கப்பு சுப்பனும் போயிரனும் என்று, உணவு என வந்தாலே 90%  யூடுபில் போட்டு லைக் வாங்குவதற்கு தான் சாப்பிடுகிறார்கள்,படைப்பாளிகள் புதிதாக உருவாக வேண்டும் சினிமா அதுதான் எதிர்பார்க்கிறது.என்னுடைய நடிப்பில் 80ஸ்,பில்டப், வடக்குப்பட்டி ராமசாமி அடுத்தடுத்த படங்கள் வர உள்ளது.என தெரிவித்தார்.

Edited By: Sugapriya Prakash