புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (10:24 IST)

5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் இந்த மூவரா? பரபரப்பு தகவல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில்  தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் 5 போட்டியாளர்கள் இடம்பெறப் போவதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் புதிதாக பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஐந்து போட்டியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 3 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

அவர்களின் ஒருவர் கானா பாலா. கானா பாடல்கள் சென்றால் பிக் பாஸ் வீடு கலகலப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ராஜா ராணி சீரியல் நடித்து வரும் விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் கலக்கப்போவது யாரு பாலாவும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாளைய நிகழ்ச்சியில் தான் ஐந்து புதிய போட்டியாளர்கள் யார் என்பது  உறுதிபட தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran